உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம்: பாலக்காட்டில் கோலாகலம்

ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம்: பாலக்காட்டில் கோலாகலம்

பாலக்காடு: திருப்பதி ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம், பாலக்காட்டில் கோலாகலமாக நடந்தது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு செய்யும் சிறப்பு வழிபாடுகளில் ஒன்று, ஆர்ஜித சேவை. ஆர்ஜித சேவைகளில் முக்கியமானது திருமண உற்சவம். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும், ஸ்ரீனிவாசா திருமண உற்சவ விழா, வெகு பிரசித்தம். திருப்பதிக்கு சென்று, திருமண உற்சவத்தில் பங்கேற்க முடியாத பக்தர்களுக்காக, பாலக்காடு கோட்டை மைதானத்தில் ஸ்ரீனிவாசா திருமண உற்சவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைமையில், இந்நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  நிகழ்ச்சியில் ஹரிகதை மற்றும் அன்னமாச்சாரிய கீர்த்தனைகளை பக்தர்கள் கேட்டு பரவசமடைந்தனர். திருப்பதி தேவஸ்தான தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் தலைமையில்,  அர்ச்சகர்கள் உட்பட, 45 ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இரவு, 9:00 மணிக்கு பிரசாத வினியோகத்துடன் திருமண உற்சவம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !