உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுக்குப்பம் கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை

நடுக்குப்பம் கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை

மரக்காணம் : மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதண்டு மாரியம்மன் கோவிலில், மண்டல பூஜை நடந்தது. நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமி நடத்தி வைத்தார். அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடந்தது. நிறைவு விழாவான நேற்று ஸ்ரீதண்டு மாரியம்மன் கோவிலில், முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாச சுவாமி தலைமையில், காலை 8:30 மணிக்கு, 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. மேலும், மழை வேண்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, கிராம மக்கள் கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இரவு அம்மன் பூ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !