தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய பால்குட ஊர்வலம்
ADDED :3298 days ago
இடைப்பாடி: தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என, பிரார்த்தனை செய்து, இடைப்பாடியில் பால்குட ஊர்வலம் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய வேண்டி, இடைப்பாடியில் நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தலைமையில், சேலம், எம்.பி., பன்னீர்செல்வம் உள்பட 3,000க்கும் மேற்பட்டவர்கள் பால்குடங்களை எடுத்து வந்து பிரார்த்தனை செய்தனர். நைனாம்பட்டி பகுதியில் இருந்து, கவுண்டம்பட்டி பகுதியில் உள்ள முத்துகுமாரசுவாமி கோவில் வரை, பால்குட ஊர்வலம் நடந்தது.