உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெ.கிருஷ்ணாபுரம் கோவிலுக்கு புதிய மாரியம்மன் சிலை வருகை

வெ.கிருஷ்ணாபுரம் கோவிலுக்கு புதிய மாரியம்மன் சிலை வருகை

அரியலூர்: வெங்கடகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்ய, புதிதாக வடிவமைக்கப்பட்டு வரவழைக்கபட்ட, விநாயகர் மற்றும் மாரியம்மன் விக்ரகங்களின் திருவீதி உலா நடந்தது. அரியலூர் அருகே, வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள, ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, விநாயகர் மற்றும் மாரியம்மன் விக்ரகங்கள், சேலம் மாவட்டம், உக்கரை கிராமத்தில் வடிவமைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் 38 1,500 ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டு, அஸ்தினாபுரம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்ட, விநாயகர் மற்றும் மாரியம்மன் விக்ரகங்களின் திருவீதி உலா நேற்று முன்தினம் நடந்தது. வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில், கொல்லிமலை பகவான் காமராஜ் ஸ்வாமிகள் தலைமையில் நடந்த, புதிய விக்ரகங்களின் திருவீதி உலா நிகழ்ச்சியில், வெங்கடகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் முத்துசாமி, கிராம பிரமுகர்கள் தங்கராசு, பச்சைமுத்து, சுப்ரமணியன், வேலாயுதம், பழனிவேல், ராஜவேல், சாமிதுரை, ஆறுமுகம், கூத்தப்பன், பரமேஸ்வரி, ராஜதுரை, கவிதா, பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !