திருத்தணியில் நாக சதுர்த்தி விழா
திருத்தணி: நாகசதுர்த்தி விழாவையொட்டி, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், பாம்பு புற்றிற்கு பால், முட்டை ஊற்றி பெண்கள் வழிபட்டனர். தீபாவளி முடிந்து, ஐந்தாம் நாளில், நாகசதுர்த்தி விழா க�ொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ஒட்டி, திருத்தணி நகரத்தில் உள்ள கங்கையம்மன் கோவில், நல்ல தண்ணீர் குளக் கரையில் உள்ள நாகவள்ளி கோவில், மடம் மற்றும் மேட்டுத்தெருவில் உள்ள படவேட்டம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களில் நாகசதுர்த்தி விழா ஒட்டி திரளான பெண்கள், அங்குள்ள புற்றில் முட்டை , பால் ஊற்றி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதே போல், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் உள்பட திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில், நாகசதுர்த்தி விழாவையொட்டி, பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்தும், பால், முட்டை புற்றில் ஊற்றி வழிபட்டனர். திருத்தணி நல்லதண்ணீர் குளக்கரையின் மீது உள்ள நாகவள்ளி கோவிலில், பெண்கள் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.