திருவள்ளூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா
ADDED :3294 days ago
திருவள்ளூர்: கந்த சஷ்டியை முன்னிட்டு, சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவள்ளூர் சிவ - விஷ்ணு கோவிலில், வள்ளி,தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சன்னிதி உள்ளது. இங்கு கந்த சஷ்டி திருவிழா கடந்த, 30ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு பல்வேறு அலங்கார, அபிஷேகம் நடக்கிறது.நான்காவது நாளான நேற்று, முருகப் பெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆறாவது நாளான, வரும் 6ம் தேதி, காலை 9:00 - 10:30 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை, 3:00 மணியளவில், புதிய தங்கமயில் வாகனத்தில், வீதி உலா நடைபெறும்.