குமாரசுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
ADDED :3294 days ago
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் குமாரசுவாமி கோவிலில், நாளை, சூரபத்மனை முருக பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடக்கிறது.திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில், வள்ளி தேவசேனா சமேத குமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழா, கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாவது நாளான நாளை, மாலை 6:00 மணியளவில், அசுரன் சூரபத்மனை முருக பெருமான் வதம் செய்யும் நிகழ்வு நடக்கிறது.