உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. சென்னிமலை, காங்கேயம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த அக்., 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு மாவிளக்கு ஊர்வலத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இன்று மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !