ஆதிபராசக்தி பீடத்தில் சிறப்பு பூஜை
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சக்தி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சக்திபீட தலைவர் பழனிச்சாமி பூஜையை துவக்கி வைத்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வட்ட வேள்விக்குழு பாலசுப்ரமணியன், நிர்வாகிகள் பால்ராஜ், பழனி, கருணாமூர்த்தி, ஜோதி, கஸ்துாரி, சீத்தா, சாவித்திரி, வசந்தி சம்பத், ஆடிட்டர் தட்சணாமூர்த்தி, மலர்கொடி, விஜி, செல்வி கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, மாவட்ட வேள்விக்குழு தலைவி திரிபுரசுந்தரி, வசுந்தராதேவி, செயல் தலைவர் சீத்தாராமன், பொருளாளர் சண்முகம், லட்சுமிநாராயணன், பார்வதி, சுசிலா, வெங்கடாஜலபதி செய்திருந்தனர்.