மகா மாரியம்மன் கோவிலில் வரும் 10ல் தேரோட்டம்
ADDED :3290 days ago
சென்னிமலை: முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் வரும் 10ல் நடக்கிறது. சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் ஜப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தேரோட்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த அக்., 26ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நாளை மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தேரோட்டமும் நடக்கிறது. அதே நாளில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவர். அன்று இரவு, 7:00 மணிக்கு அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் அகியவை நடைபெறும். தேரோட்டத்தை தொடர்ந்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள, 14க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.