உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, அரசு மருத்துவ மனை அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டு, காலை, 9:30 மணிக்கு கும்பா பிஷேகம் நடந்தது. பாலு குருக்கள் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். மதியம் நடந்த சிறப்பு அலங்கார பூஜையில், பங்கேற்ற பக்தர்களுக்கு, தாலி சரடு வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !