உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) வீடு வாங்க யோகம்

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) வீடு வாங்க யோகம்

நல்ல உள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ஆட்சி நாயகன் செவ்வாய் டிச.6ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். புதன் நவ.25- வரையும்,  சுக்கிரன் டிச.4- வரையும்  நற்பலனைக்  கொடுப்பார்கள். கேது மாதம் முழுவதும் நன்மைகளைத் தருவார். உங்கள் திறமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால்  உதவி கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். மாதத் தொடக்கத்தில் எடுத்த செயல் வெற்றி அடையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.  உங்கள்  செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். நவ.25-க்கு பிறகு  கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்னைகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். டிச.10, 11-ல் பெண்கள் மூலம்  பணபலன் கிடைக்கும். நவ.19,20-ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.ஆனால் டிச.6,7-ல் அவர்களால் நன்மை கிடைக்கும்.  டிச.6-க்கு பிறகு புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
    
தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பணவரவுக்கு பஞ்சம் இருக்காது. அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை ஒன்று கிடைக்காமல்  போகலாம்.  கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். நவம்பர் 25-க்கு பிறகு  போட்டி அதிகரித்தாலும் சமாளிக்கும் அளவு இருக்கும். நவ.16,  டிச.8,9,12,13ல் பண விஷயத்தில் மிக கவனமாக இருக்கவும். நவ. 24,25-ல் பணவரவு நன்றாக இருக்கும்.

பணியாளர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். உயர் அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கைகள் நிறை வேறும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு நவ.25க்கு பிறகு வேலைப் பளு,  அலைச்சல் இருக்கும். பொறுமையுடன் இருக்கவும், சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். டிச.6-க்கு பிறகு போலீஸ்,ராணுவம்  உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.  டிசம்பர் 4,5-ல் எதிர்பாராத வருமானம் அல்லது  சலுகை கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வசதி பெருகும்.  பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். டிச.4க்கு பிறகு  எதிரிகள் தொல்லை  அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் சீரான பலனை காண்பர். டிச.4-க்கு பிறகு முன்னேற்றம் உண்டு. தலைமையிடம் நல்ல பெயரையும் பொருளாதார வளத்தையும்  பெற இடமுண்டு.

மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். நவ.25-க்கு பிறகு கல்வியில் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற  வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைப்படி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு வருமானம்குறையிருக்காது. கிழங்கு வகை நல்ல மகசூல் தரும். கால்நடை மூலம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.  புதிய சொத்து  வாங்குவதற்கான அனுகூலம் உண்டு.

பெண்கள்  குடும்பத்தில் நற்பெயர் எடுப்பீர்கள்.  கணவரின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். நவ.26,27,28ல் பணவரவால்  உற்சாகமாக காணப்படுவீர்கள். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  நவ.17,18, டிச.14,15-ல் புத்தாடை, நகை வாங்கலாம். நவ.25-க்கு பிறகு  வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். டிச.4-க்கு பிறகு பதவி உயர்வுக்கு முயற்சிக்கலாம்.      உடல்நலம் சீராக  இருக்கும்.

நல்ல நாள்: நவ.17,18,24,25,26 டிச.4,5,6, 7,10,11.

கவன  நாள்:  நவ. 27,28,29-  சந்திராஷ்டமம். அப்போது  அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். புதிய முயற்சிகள்,  சுபநிகழ்வு முயற்சிகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண்: 6,7    நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். விநாயகர் வழிபாடும், பெருமாள் துதியும் உங்களை முன் னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். புதன் கிழமைகளில் ஏழைகளுக்கு தானம் கொடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !