உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோயிலில் கார்த்திகைப் பெருவிழா

மலைக்கோயிலில் கார்த்திகைப் பெருவிழா

பழநி: பழநி திருமுருக பக்தசபா சார்பில் மலைக்கோயிலில் கார்த்திகைப் பெருவிழா நடந்தது. ஐப்பசி கார்த்திகையை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் பகல் 12 மணிக்கு குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் சாத்தி மகா தீபாரதனையும், மலைக்கோயிலில் ஞானதண்டாயுதபாணிக்கு அபிஷேக, சிறப்புபூஜை நடந்தது. பக்திசொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 6.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், அதில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கபட்டது. திருமுருக பக்தசபா நிர்வாகிகள், உபயதாரர்கள் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இரவு 7 மணி தங்கரத புறப்பாட்டை காண பக்தர்கள் திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !