உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தை முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம்

மந்தை முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை;தென்னம்பட்டி வடக்கு தெருவில் விநாயகர், காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன், மந்தை முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை தீர்த்த குடங்கள், முளைப்பாரி அழைப்புடன் முதல் கால யாக பூஜைகள் துவங்கி நடந்தன. நேற்று காலை விநாயகர் வழிபாடுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தன. பின்னர் கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பிரசன்ன வெங்கடேஷ் நடத்தி வைத்தார். பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் தனலட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !