பழநி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா
ADDED :3361 days ago
பழநி: ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசியில் வரும் பவுர்ணமி திதியன்று, சிவன்கோயில்களில், உலக நலன்வேண்டி அன்னாபிஷேகம் செய்துவது வழக்கம். இவ்வாண்டு நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பழநி பெரியாவுடையார் கோயில் புதுநகர் யோகஸ்வரர், மற்றும் இடும்பன்மலை அருகேயுள்ள பஞ்சமுக பிரபஞ்சநாதர் கோயிலில் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. சர்ப்பஜடாதாரி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பழநி அடிவாரம் மதனபுரம் அண்ணாமலையார் உண்ணாமுலை நாயகி கோயில் போன்ற பல்வேறு இடங்களிலுள்ள சிவன் கோயில்களில், மாலையில் சிறப்பு அலங்காரம், செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.