சீரடி சாய்பாபா 93வது சமாதி நாள் விழா
ADDED :5123 days ago
காஞ்சிபுரம் : சீரடி சாய்பாபா 93வது சமாதி நாள் விழா காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரம் திருவீதிபள்ளத்தில் உள்ள சீரடி சாய்பாபா பஜனை மையத்தில், சீரடி சாய்பாபாவின் 93வது சமாதி நாள் விழா நடந்தது. விழாவையொட்டி, காலை பாலவிகார் சிறுவர்களின் நகர சங்கீர்த்தனமும், சீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகமும் நடந்தது. பகல் 12 மணிக்கு நாராயண சேவையும், அதனைத்தொடர்ந்து பஜனை பாடல்களும் பாடப்பட்டது. விழா ஏற்பாடுகளை சத்யசாய் சேவா நிறுவனத்தினர் செய்திருந்தனர்.