சபரிமலை காட்சிகளை காண இணையதளம் தொடக்கம்
ADDED :3639 days ago
சபரிமலை: சபரிமலை காட்சிகளை நேரடியாக காண இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நடை திறந்து எட்டு நாட்களில் வருமானம் 22.66 கோடி ரூபாய். கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் 19.95 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பில் பிரசாத பொட்டலம் தயாரிக்கப்பட உள்ளது, என தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபால கிருஷ்ணன் கூறினார்.
நேரடியாக ஐயப்பன்: சபரிமலை காட்சிகளை நேரடியாக காண www.sabarimala.tdb.org.in என்ற இணையதளத்தை தேவசம்போர்டு தலைவர் நேற்று தொடங்கி வைத்தார். sabarimala official என்ற பெயரில் டுவிட்டர், முகநுால் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.