நாவற்குளம் ராஜகோபால சித்தருக்கு மஹா கும்பாபிஷேகம், குருபூஜை
புதுச்சேரி: நாவற்குளம் ஸ்ரீலஸ்ரீ ராஜகோபால சித்தருக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை விழா நேற்று நடந்தது. புதுச்சேரி நாவற்குளத்தில் ஸ்ரீலஸ்ரீ ராஜகோபால சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்குள்ள சித்தருக்கு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா, நேற்று முன்தினம் காலை 4:30 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு முதற்கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு, மகா அபிஷேக ஆராதனை, காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ– பூஜை, திரவியா ஹூதி, பூர்ணாஹூதி, மகா பூரணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் ராஜகோபால சித்தருக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் மூன்றாம் ஆண்டு குரு பூஜை நடந்தது. மகா தீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள் பெருமாள், சுகுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சத்தியமூர்த்தி செய்திருந்தார்.