உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவில் உண்டியலில் செல்லாத நோட்டுகள்

மாசாணியம்மன் கோவில் உண்டியலில் செல்லாத நோட்டுகள்

பொள்ளாச்சி : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்த உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 2 லட்சத்து 36 ஆயிரத்து 500 ரூபாய் செல்லாத நோட்டுகள் இருந்தன. பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 17 நிரந்தர உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. திருப்பூர் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி தலைமை வகித்தார். மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக், பொள்ளாச்சி ஆய்வர் புவனேஸ்வரி, கோவில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர். மொத்தம் உள்ள 17 நிரந்தர உண்டியலில், 16 லட்சத்து 35 ஆயிரத்து 812 ரூபாய் இருந்தது. தங்கம் 95 கிராமும்; வெள்ளி 146 கிராமும் இருந்தது. புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் 1,52,000 ரூபாய்க்கும்; மூன்று புதிய 500 ரூபாய் நோட்டுகளும் வந்தன. திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செல்லாதவை: 57,000 ரூபாய்க்கு 1,000 ரூபாய் நோட்டுகளும்; 1லட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பழைய 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் 2,36,500 ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டுகளாக இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !