உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அதிகரிக்கும் ஆடம்பரச் செலவு

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அதிகரிக்கும் ஆடம்பரச் செலவு

மனஉறுதி கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

குரு பகவான் ராசிக்கு  5ல் இருப்பதால் நன்மையை வாரி வழங்குவார்.  புதன் டிச.19  வரையும்,  ஜன. 8க்கு பிறகும் தனுசு ராசியில் இருந்து நற்பலன்  கொடுப்பார். இடைப்பட்ட காலத்தில் அவர் வக்ரம் அடைந்து உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருப்பதால் நற்பலன் குறையும். சுக்கிரன்  டிச.30 வரை  சிறப்பான பலன் தர காத்திருக்கிறார். குருவால் எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணப்புழக்கம்  கையில்  அதிகரிக்கும். பெண்களால் மேன்மை உண்டாகும்.   ஜன.8க்கு பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். குடும்பத் தேவை  அனைத்தும் பூர்த்தியாகும். வாழ்வில் ஆடம்பர வசதிகள்  பெருகும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் நல்ல முடிவு  கிடைக்கும். புதுமணத்  தம்பதியருக்கு  குழந்தை பாக்கியம் உண்டாகும். மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் புதிய  முயற்சியில் வெற்றி உண்டாகும். புத்தாடை,  அணிகலன்கள்  வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும்.   சுக்கிரன்  சாதகமாக இருப்பதால் பெண்கள்  உதவிகரமாக இருப்பர். குறிப்பாக  ஜன.9,10ல் அவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். ஜன.4,5, 6ல்  உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் டிச.19,20ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு  வர வாய்ப்புண்டு.  எனவே சற்று ஒதுங்கி இருக்கவும்.செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு.

தொழில், வியாபாரத்தில் டிச.29  வரை பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல  லாபத்தைக் கொடுக்கும். அதன் பிறகு தொழிலில் போட்டி அதிகரிக்கும். அரசு வகையில் சாதகமான நிலை காணப்படவில்லை. எனவே வரவு செலவு  கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். டிச.23,24ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். டிச.16, ஜன.8,11,13ல் சந்திரனால் சிறு சிறு தடைகள் உரு வாகலாம்.

பணியாட்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.   தனியார் துறையில் இருப்பவர்களுக்கு மாதத் தொடக்கத்தில் புதன் சாதகமாக இ ருப்பதால் நற்பலன் கிடைக்கப் பெறுவர். சிலர் டிச.19க்குள் உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. அதன் பிறகு அலைச்சல், வேலை பளு ஏற்பட வா ய்ப்புண்டு. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். பணி விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

கலைஞர்களுக்கு  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். டிச.29க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற நிலையில்  காணப்படுவதால்  கடுமையாக  உழைக்க ÷ வண்டியதிருக்கும். உங்களுக்கு வரவேண்டிய பாராட்டு, புகழ் தட்டி பறிக்கப்படும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். டிச.21,22ல்  பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

மாணவர்கள் புதனால் ஓரளவு நற்பலன் கிடைக்க பெறுவர்.  குரு சிறப்பாக இருப்பதால்  முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது.  ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

விவசாயிகள் எதிர்பார்த்த  மகசூல் கிடைக்கப் பெறுவர். எள், கரும்பு மற்றும் கீரைவகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய  சொத்து வாங்கும் முடிவு தள்ளிப் போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். சுப நிகழ்ச்சிகளில்  பங்கேற்று  மகிழ்வர்.  கணவனின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  மாத பிற்பகுதியில்  விட்டுக் கொடுத்து போக வேண்டியதிருக்கும். டிச.29 வரை வேலைக்கு செல்லும் பெண்கள் சக ஊழியர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.  அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.  சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர்.அதன் பிறகு பொறுமையும்  நிதானமும் தேவைப்படும்.  டிச.25,26,27ல் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். உடல் நலம் சுமாராக இருக்கும். செவ்வாயால் உஷ்ண, பித்தம், ÷ தால் தொடர்பான உபாதை ஏற்படலாம்.

நல்ல நாள்: டிச.17,18,23,24,25,26,27, ஜன. 2,3,4,5,6,9,10,13

கவன நாள்: டிச.28,29,30 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும்
தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: மஞ்சள், வெள்ளை

பரிகாரம்: தினமும்  சூரிய தரிசனம் செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்வது நல்லது. செவ்வாய்க்கிழமை முரு கனை வழிபட்டு துவரை தானம் செய்யலாம்.  பசுவுக்கு தழை கொடுத்தால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !