திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் கார்த்திகை விழா
ADDED :3521 days ago
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் கார்த்திகை விழா, கடைசி சோமவார விழா நடந்தது. காலையில் மூலவர் காசி விஸ்வநாதர் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்பு மூலவருக்கு சங்குகளில் இருந்த புனித நீர் அபிஷேகம் முடிந்து, சிறப்பு அலங்காரமானது. கார்த்திகை விழா: டிச. 4முதல் மூலவர்கள் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு நடந்து வந்த சிறப்பு பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.