உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிகோயிலில் இன்று முதல் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

பழநிகோயிலில் இன்று முதல் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

பழநி: மார்கழி பிறப்பை முன்னிட்டு இன்றுமுதல் பழநி மலை ஞானதண்டாயுதபாணி சுவாமி கோயில் தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும்.  இன்று மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு பழநி மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. அதனை தொடர்ந்து ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகபூஜைகள் செய்து விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாத்தி மகா தீபாராதனை, சண்முகர், வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும். இதேபோல மார்கழி மாதம் முழுவதும் தினசரி அதிகாலை 4:௦௦ மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் அதனை தொடர்ந்து உச்சிகாலம், சாயரட்சை, இராக்காலம் என ஆறுகால பூஜையில் மூலர் ஞானதண்டாயுதபாணி சுவாமி, சாது, வேடர், பாலசுப்ரமணியர், வைதீகாள், ராஜஅலங்காரம், புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை மேனகா செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !