ஐயப்பா சேவா சங்கம்: திருவிளக்கு வீதி உலா
ADDED :3255 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், நாராயண நகர் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 19ம் ஆண்டு திருவிளக்கு வீதி உலா நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். கேரளா மாநிலம் பெருங்கோட்டுகாவு பகுதி மூத்த குருசாமி பங்கஜாஸ் குருசாமி ஆசி வழங்கினார். நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள, ஐயப்பா சேவா மண்டபத்தில் இருந்து, புஷ்ப அலங்கார ஊர்தியில், சர்வ அலங்காரத்துடன் ஐயப்பன் சுவாமி அருள்பாலிக்க, 3,000க்கும் மேற்பட்ட பெண்கள், கைகளில் திருவிளக்கு ஏந்தியவாறு, அம்மன் நகர் ஐயப்பன் கோவிலை வந்தடைந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.