ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்
ADDED :3255 days ago
சென்னை: ஹஜ் பயணம் செல்ல விரும்பும், தமிழக முஸ்லிம்கள், ஜன., 21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹஜ் பயணம் செல்லும், தமிழக முஸ்லிம்களுக்கு, அரசு உதவி செய்து வருகிறது. இதில் பயன்பெற, சென்னை, நுங்கம்பாக்கம், மகாத்மா காந்தி சாலை, ரோஸி டவரில் உள்ள, மாநில ஹஜ் குழு செயலர் அலுவலகத்தில், ஜன., 2 முதல், விண்ணப்பங்கள் கிடைக்கும்.மேலும், www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜன., 24க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.