உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கலுக்கு 10,868 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கலுக்கு 10,868 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை : சென்னையில் இருந்து, அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய ஊர்களுக்கு செல்ல தினமும், 2,275 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜன., 11ல், 794; 12ல், 1,779; 13ல், 1,872 பஸ்கள் என, கூடுதலாக, 4,445 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களில் இருந்து, மூன்று நாட்களில், 6,423 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பஸ்களின் இயக்கம் குறித்து அறிய, புகார் தெரிவிக்க, 044 - 24794709 டெலிபோன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தற்காலிக பஸ் நிலையம்:  சென்னையில் பயணிகள் பஸ் ஏறும் இடங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன; அவை விபரம் வருமாறு:
* சென்னை செங்குன்றம் வழியாக, ஆந்திரா செல்லும், அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பஸ்களும், அண்ணாநகர் மேற்கில் உள்ள, மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

* கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள், அடையாறு காந்தி நகரில் உள்ள, மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

* திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும், விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் உட்பட, அனைத்து வழித்தட பஸ்களும், தாம்பரம் சானடோரியம், அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

* பூந்தமல்லி வழியாக, ஆற்காடு, ஆரணி, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மற்றும் ஓசூருக்கு செல்லும் பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

* இந்த நான்கு வழித்தடங்களில் செல்லும் பஸ்களுக்கு, ஜன.,11 முதல், 13ம் தேதி வரை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில், முன்பதிவு செய்துள்ள பயணிகள் மற்றும் பிற பயணிகள், மாற்றி அமைக்கப்பட்டு உள்ள, தற்காலிக பஸ் நிலையங்களுக்கு சென்று, பயணம் செய்ய வேண்டும்

* மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், பெங்களூரு செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்

வழித்தட மாற்றம்:
* கோயம்பேடு பஸ் நிலையத்தில், இருக்கைகள் பூர்த்தியான பஸ்கள், தாம்பரம் செல்லாமல், மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை வெளிவட்ட சாலை வழியாக, வண்டலுார் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்பதிவின் போது, தாம்பரம் மற்றும் பெருங்களத்துார் பஸ் நிலையங்களில் இருந்து பயணிக்கும் வகையில், முன்பதிவு செய்தவர்கள், ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து பயணம் செய்ய வேண்டும்

* கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசலின்றி பயணம் செய்யலாம். அனைத்து பஸ் நிலையங்களுக்கும், இணைப்பு பஸ்கள், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !