உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை : மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. நாளை அதிகாலை முதல் நெய் அபிஷேகம் நடக்கிறது. மண்டலகால பூஜைகள் முடிந்து டிச. 26 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சன்னிதான சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. மண்டல காலத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் பக்தர்கள் காயம் அடைந்ததால் மகரவிளக்கு காலத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி போலீசாரும், தேவசம்போர்டு நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினர். மண்டல காலத்தை விட மகரவிளக்கு காலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோயில் நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைப்பார். ஜன.,17 வரை எல்லா நாட்களிலும் இரவு 3:30 முதல் காலை 11:30 வரை நெய் அபிஷேகம் நடைபெறும். ஜன.,14-ல் மகரஜோதி தரிசனம் நடைபெறும். ஜன.,11-ல் எருமேலி பேட்டை துள்ளல், ஜன.,12-ல் பந்தளத்தில் இருந்து திருவாபரண புறப்பாடு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !