உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆகாயம் பார்க்கும் ரங்கநாதர்!

ஆகாயம் பார்க்கும் ரங்கநாதர்!

செஞ்சியை ஆண்ட மன்னன் ராஜாதேசிங்கு, ஸ்ரீரங்கநாதரின் தீவிர பக்தன். செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊரில் சிறிய மலையின் மீது ஸ்ரீரங்கநாதருக்கு குடைவரைக் கோயில் ஒன்றைக் கட்டினான். பொதுவாக ஆதிசேஷன்மீது படுத்தவாறு பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் ஸ்ரீரங்கநாதர் இங்கு ஆகாயத்தைப் பார்த்தவாறு தரிசனம் தருகிறார். இதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சம்பவம் உள்ளது. மொகலாயருடன் போரிட அனுமதி கேட்டான் தேசிங்கு. அதற்கு அசரீரி வாக்காக அனுமதி மறுத்தார் ஸ்ரீரங்கநாதர். அதையும் மீறி போருக்குச் சென்று தோல்வியைத் தழுவிவிட்டு, ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க வந்தான் மன்னன் தேசிங்கு. தன் பேச்சை மீறிய தேசிங்கை பார்க்க விரும்பாமல் ஆகாயம் பார்த்துப் படுத்துக் கொண்டார் ரங்கநாதர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !