உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுளுக்கு விநாயகர்

சுளுக்கு விநாயகர்

எதிர்பாராதவிதமாக சுளுக்கு ஏற்படுவது எல்லோர் வாழ்விலும் சகஜம். அப்படி ஏற்பட்டால், அதனை சரி செய்ய பரம்பரை வழியையோ அல்லது நவீன மருத்துவத்தையோ நாடுவார்கள். ஆனால், திருவண்ணாமலையில் இருந்து இருபத்தைந்து கி.மீ. தொலைவில் உள்ள மணவார்பேட்டை தலத்திலும், அதன் சுற்றுப்பகுதியிலும் உள்ளவர்களும் சுளுக்கு பிடித்தால் உடனே அங்கே இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் செல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொண்டால் சீக்கிரமே சுளுக்கு நீங்கிவிடும். சுமார் நூறாண்டுகளுக்கும் மேலான இந்த விநாயகருக்கு இதனால் சுளுக்கு விநாயகர் கோயில் என்றே பெயர் அமைந்துவிட்டது. இவர் கோயிலிருக்கும் தெருவும் இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !