உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலநாதர் குறும்பலா ஈசனின் சிறப்பு

குற்றாலநாதர் குறும்பலா ஈசனின் சிறப்பு

குற்றாலநாதர் குறும்பலா ஈசனின் சிறப்பு என்ன தெரியுமா? சைவம் சார்ந்த முனிவரான அகத்தியர் வைணவ வடிவம் தாங்கி ஆலயத்துள் சென்று அங்கிருந்த விஷ்ணுமூர்த்தியைத் தமது திருக்கரத்தால் குழைவித்து குறுகுறுகெனச் சிவலிங்கப் பெருமானாகச் செய்து பூஜித்த தலம் திருக்குற்றாலம். இதனை கந்தபுராணம் அசுரகாண்டம் திருக்குற்றாலப்படலம் 15-வது செய்யுள் எடுத்துக்கூறி மெய்ப்பிக்கிறது அப்பாடல்... அறுகு மதி நதிபுனையுஞ் செஞ்சடை யெம்பெருமானையகத்து கொண்டு சிறு குமுரு வுடைய முனி நாரணனார் திருமுடிமேற் செங்கையோச்சிக் குறு குறுகென விருத்தி யொள்ளரக்கிற் புனை பாவைக் கோலமீது. மறு குதமலூற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !