மார்கழி தேரோட்டம் திண்டுக்கல் துர்க்கையம்மன் வீதியுலா
ADDED :3211 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கோட்டை மாரியம்மன் கோயில் மார்கழி மாத துர்க்கைத் தேரோட்டம் ஜன.6ல் நடந்தது.
இதில் பெண்களின் பேரணியுடன் தேரோட்டம் கோயில் வளாகத்தில் துவங்கியது. முன்னாள் மேயர் மருதராஜ் துவக்கி வைத்தார். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோட்டை மாரியம்மன் திடலுக்கு வந்தடைந்தது. மீண்டும் ஜன.6, 9:00 மணிக்கு தாலுகா அலுவலக ரோடு, பழநி ரோடு வழியாக ஸ்ரீதுர்க்கை பூஜை மண்டபம் அடைந்தது. தேரோட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு, செங்கயிறு உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சிவசக்திநாகராஜ், டாக்டர் காஞ்சனை செய்திருந்தனர்.