உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.கே.பேட்டை அம்மனுக்கு சிறப்பு உற்சவம்

ஆர்.கே.பேட்டை அம்மனுக்கு சிறப்பு உற்சவம்

ஆர்.கே.பேட்டை: வெள்ளிக்கிழமையை ஒட்டி, வெள்ளாத்துாரம்மனுக்கு ஜன.6 ல், சிறப்பு உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரம்மன் கோவிலில், ஜன.6 காலை சிறப்பு அபிேஷகம் மற்றும் தரிசனம் நடந்தது. காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகங்கள் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள், அம்மனுக்கு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, படையல் செய்தனர். மேலும், எலுமிச்சை விளக்கேற்றி வேண்டிக்கொண்டனர். அபிஷேகத்தை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாகாலம்மன், விநாயகர், சுப்ரமணிய சுவாமி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டது. ஆங்கில புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால், வெள்ளாத்துாரம்மனை குலதெய்வமாக வழிபடும் ஏராளமானோர், நேற்று அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தனர். இதேபோல், வங்கனுார் செவிண்டிஅம்மன் கோவில், பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன் கோவில், அம்மையார்குப்பம் காமாட்சியம்மன் கோவில்களிலும் ஜன.6ல்,சிறப்பு அபிேஷகம்,
அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !