உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யாகம் நடத்தும்போது ’ஸ்வாஹா’ என்று சொல்வதன் பொருள் என்ன?

யாகம் நடத்தும்போது ’ஸ்வாஹா’ என்று சொல்வதன் பொருள் என்ன?

யாகம் என்பது அக்னியில் செய்யப்படுவது. ’அக்னிம் துாதம் வ்ருணீமஹே’ என்கிறது வேதம். நாம் எந்த தெய்வத்திற்காக யாகத்தில் திரவியங்களைப் போடுகிறோமோ, அவற்றை அந்த தெய்வத்திடம் சேர்ப்பிக்க வேண்டியவர் அக்னி தேவன். அதாவது தெய்வ துாதர். இதனைச் செய்ய  ஸ்வாஹா, ஸ்வதா என்ற சக்திகளை உடன் வைத்திருப்பார். அக்னியில் இடப்படும் திரவியங்களை ஹவிர்பாகமாக செய்து ஸ்வாஹா எனும் சக்தி மூலம் தேவர்களுக்கு அனுப்புவார். இதையே பித்ருக்களுக்காக செய்தால், ஸ்வதா என்னும் சக்தி மூலம் முன்னோர்களுக்கு சேர்ப்பார். தேவர்களுக்கு அக்னிமூலம் கொடுப்பது ஹவிஸ் என்று பெயர். இதை எடுத்துச் சென்று சேர்ப்பவர் ஸ்வாஹா. பித்ருக்களுக்கு அக்னியில் இடப்படுவது கவிஸ். இதை எடுத்துச் சென்று சேர்ப்பவர் ஸ்வதா. எனவேதான் ஸ்வாஹா அல்லது ஸ்வதா என்று  யாகத்தில் சொல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !