உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சபேஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம்

கச்சபேஸ்வரர் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஆருத்ரா உற்சவத்தை ஒட்டி, இன்று இரவு கச்சபேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு பல வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் கச்சபேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா உற்சவத்திற்காக, மார்கழி திருவாதிரை அன்று, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இன்று இரவு, 10:00 மணிக்கு, அனைத்து வகை வாழைப்பழங்கள் தனித்தனியாக மற்றும் சாத்துக்குடி, மாதுளை, திராட்சை, கொய்யா, பேரீட்சை, பால், தயிர், பன்னீர், நெய், இளநீர், கரும்பு சாறு, சந்தனம், விபூதி, தேன், உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட பொருட்களால் நடராஜப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. நள்ளிரவு, 12:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும். மறுநாள் காலை சிறப்பு அலங்காரத்தில் நான்கு ராஜவீதிகளில் நடராஜப் பெருமான் வலம் வருவார். இதே போல், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சைவ தலங்களில் உள்ள உற்சவர்களும், நாளை, நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !