உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரிநாத் ராமர் கோவில் மடாதிபதி சூளகிரி வருகை

பத்ரிநாத் ராமர் கோவில் மடாதிபதி சூளகிரி வருகை

ஓசூர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரி நாத் ராமர் கோவில் மடாதிபதி, சூளகிரிக்கு வருகை தந்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் பகுதியில் விஷ்ணு கோவில் உள்ளது. இங்குள்ள ராமர் கோவிலில், ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த சுவாமி மடாதிபதியாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், கர்நாடகா மாநிலத்திற்கு வந்திருந்த அவர், உடுப்பி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். ஓசூர் வழியாக நேற்று, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சென்ற அவர், சூளகிரியில் இறங்கி, அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதையறிந்த சூளகிரி பகுதி பக்தர்கள், அவரிடம் ஆசி பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !