அழகிரிநாதர் கோவிலில் நாளை திருக்கல்யாணம்
ADDED :3234 days ago
உத்தமசோழபுரம்: அழகிரிநாதர் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாணம், நாளை நடக்கிறது. சேலம், உத்தமசோழபுரம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் கோவிலில், கூடாரவல்லி திருவிழா, நாளை நடக்கிறது. ஆண்டாள் நாச்சியார் பெருமாளிடம், சரணாகதி அடைந்த நாளை நினைவுகூறும் வகையில், ஆண்டாள் அழகிரிநாதர் திருக்கல்யாணம் நடக்கிறது. அதை காணும், திருமணம் ஆகாத பக்தர்களுக்கு, விரைவில் திருமணம் கைகூடும்; நல்ல கணவர் வேண்டி விரதமிருந்த பெண்களுக்கு, நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம். இதனால், திருக்கல்யாணத்தை காண, ஏராளமானோர் வருவர் என, கோவில் பட்டாச்சாரியார்கள் கூறினர்.