சபரிமலையில் ’பம்பா சங்கமம்’ நிறைவு
ADDED :3234 days ago
சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாடு மையமாக அறிவிக்க வலியுறுத்தி பம்பையில் நடந்த ’பம்பா சங்கமம்’ நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியை கேரள கவர்னர் சதாசிவம் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். நேற்று காலை நடந்த ’ஐயப்ப பக்த சங்கமம்’ நிகழ்ச்சியை ஐயப்பா சேவா சங்க தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை துவக்கி வைத்தார். மாலையில் நடந்த நிறைவு விழாவுக்கு தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். புதுச்சேரி முதல்வர் நாராயணசுவாமி, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தெலுங்கானா அமைச்சர் இந்திரகரன் ரெட்டி, தேவசம்போர்டு ஆணையர் ராமராஜ பிரேம பிரசாத், தலைமை பொறியாளர் சங்கரன் போற்றி உள்ளிட்டோர் பேசினர்.