உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோவில் திருவிழா

பகவதி அம்மன் கோவில் திருவிழா

ப.வேலூர்: ப.வேலூர் அருகே, அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. ப.வேலூர் அடுத்த, ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, 7ல், துவங்கியது. அன்று மாலை, 6:00 மணிக்கு மேல், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், காவிரி ஆற்றில் புனித நீராடி, தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பூச்சாட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன்தினம் பூக்குழி நடந்தது. பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று மாலை, அம்மன் சன்னதியில், பெண்கள், பொங்கல் வைத்து பூஜை செய்தனர். பின், மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று (ஜன.,12)அதிகாலை, கிடாவெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம், அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !