உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகர் கோவிலில் பார்வேட்டை உற்சவம்

மயிலம் முருகர் கோவிலில் பார்வேட்டை உற்சவம்

மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் காணும் பொங்கல் பார்வேட்டை உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது. பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். கோவில் மண்டபத்தில் சமய சொற்பொழிவுகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் சன்னதி வீதி வழியாக பார்வேட்டைக்கு புறப்பட்டார். அப்போது கடை வீதி, பாளையத் தெருவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !