புரந்தரதாசர் ஆராதனை இன்று துவங்குகிறது
ADDED :3221 days ago
கோவை : புரந்தரதாசர் ஆராதனை இசை நிகழ்ச்சி, கோவையில் இன்று துவங்கி, வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. கோவையில் உள்ள ராகவேந்திரராவ் நினைவு அறக்கட்டளை சார்பில், புரந்தரதாசர் ஆராதனை இசை நிகழ்ச்சி, கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புரந்தரதாசர் கலையரங்கில், இன்று துவங்குகிறது. வரும் 27ம் தேதி வரை, தினமும் மாலை, 6:30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இன்றும் நாளையும், உடையலுார் கல்யாணராமன் குழுவினரின், நாமசங்கீர்த்தனமும், 26ம் தேதி, விஜயலட்சுமி சுப்ரமணியத்தின் பாட்டும், 27ம் தேதி, உன்னிகிருஷ்ணன் குழுவினரின் பாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.