கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3221 days ago
திருப்பூர் : சுல்தான்பேட்டை, தலைத்தோப்பு கன்னிமார், கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. மங்கலம், சுல்தான்பேட்டை தலைத்தோப்பு பகுதியில், விநாயகர், கன்னிமார், கருப்பண்ணசாமி, மாயவர், தன்னாசியப்பன் கோவில்கள் உள்ளன. பழமையான கோவில்களுக்கு திருப்பணி செய்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. 22ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்கியது. மகா கணபதி ஹோமம், திரவ்ய ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், 5:30 மணிக்குள், இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, யாத்ரா தான சங்கல்பம், சக்தி கலசங்கள் ஆலயத்தை வலம் வந்து, விநாயகர், கன்னிமார், கருப்பண்ணசாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா அபிஷேக, அலங்காரபூஜையும், தச தரிசன நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.