உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விசேஷ லிங்கங்கள்!

விசேஷ லிங்கங்கள்!

சிவலிங்களை ஐவகையாகச் சொல்வார்கள். தாமாகத் தோன்றியவை சுயம்பு லிங்கங்கள். வேதர்கள் பூஜித்தவை தைவீக லிங்கங்கள். மனிதர்கள் வழிபட்டது மானுட லிங்கம், முனிவர்களால் பூஜிக்கப்பட்டது ஆரிட லிங்கம், அசுரர்களால் வழிபடப்பட்டது ஆசுர லிங்கம் ஆகும். அதேபோல் பஞ்சபூத தலங்களில் அருளும் லிங்கங்களை பஞ்சபூத லிங்கங்களாகப் போற்றுவர். இவற்றுடன் சூரியன், சந்திரன் மற்றும் ஆத்மாவுக்கான தலம் ஆகியவற்றையும் சேர்த்து எண்வகை லிங்க மூர்த்தங்களை விசேஷமாகச் சொல்வார்கள்.

அப்புலிங்கம்: திருவானைக்கா
அக்னிலிங்கம்: திருவண்ணாமலை
ஆகாசலிங்கம்: சிதம்பரம்
பிருத்விலிங்கம்: திருவாரூர் (காஞ்சி)
வாயுலிங்கம்: காளஹஸ்தி
சந்திர லிங்கம்: மதுரை
சூரிய விளக்கம்: திருச்சி
ஆத்மலிங்கம் : திருப்பெருந்துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !