உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரிசுகளைப் பற்றி கவலை வேண்டாமே!

வாரிசுகளைப் பற்றி கவலை வேண்டாமே!

* கண்ணை மூடிக்கொண்டிருப்பது மட்டும் தியானமாகாது. அனைத்து செயலையும் கடவுள் வழிபாடாகக் கருதுவதுடன், அவரது அருளை அனுபவிக்க முயற்சிக்க வேண்டும்.
* வாழ்க்கையின் பாரங்கள் அனைத்தையும் ஆண்டவனிடம் ஒப்படைத்து அர்ப்பண மனப்பான்மையுடன் வாழ்ந்தால் கவலை இருக்காது. கடவுள் நம்மை எப்போதும் காத்தருள்வார்.
*வாழ்க்கையில் ஒழுங்கும், கட்டுப்பாடும் இருந்தால் தான் புறப்பொருட்களின் உதவியின்றி நம்முள் இருக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க இயலும்.
* அழியாத ஆனந்தத்திற்காக, நமது ஆத்ம
சொரூபத்தை அறிந்து கொள்ள இதுவரை நாம் முயற்சிக்கவில்லை. மீதமுள்ள காலத்திலாவது இதற்காகப் பாடுபட வேண்டும்.
*பெற்றோரும், குழந்தைகளும், உறவினரும் நமக்கு எப்போதும் துணை என்று எண்ணிவிட வேண்டாம். அதிகபட்சம் நாம் இந்த பூமியில் வாழும் வரை தான் அவர்கள் கூட இருப்பார்கள்.
*அறுபது அல்லது எண்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டோம் என்பதால் நம் பிறவி முற்றுப்பெறுவதில்லை. மீண்டும் எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. வாழ்க்கைத் தேவைகளுக்கு வங்கியில் பணம் சேமித்து வைப்பது போல, ஆரோக்கியமும், நல்ல அறிவும் இருக்கும் காலத்திலேயே இறைவனின் நாமத்தை ஜபித்தும், அறச்செயல்களில் ஈடுபட்டும் அழியாத அருட்செல்வத்தைச் சேர்த்து வைக்க வேண்டும்.
* வாரிசுகளுக்கு திருமணமாகிவிட்டால் நாம் இறைச்சிந்தனையிலும் அறச்செயல்களிலும் மூழ்கி வாழ வேண்டும். முடிந்தால் ஆஸ்ரமங்களிலோ, குருகுலங்களிலோ எஞ்சிய காலத்தைக் கழிக்கலாம். வாரிசுகளை நினைத்து வருந்துவதால் நமக்கும் பயனில்லை, அவர்களுக்கும் பயனில்லை. மாறாக இறைவனை எண்ணி நாமஜபம் செய்தபடி நாட்களைக் கழித்தால் நமக்கும், நம் குழந்தைகளுக்கும் மட்டுமின்றி ஏழு தலைமுறைகளுக்கும் நிச்சயம் பயனுண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !