உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரல் கேட்டாலும் நன்மை

குரல் கேட்டாலும் நன்மை

வானத்தில் வட்டமிடும் கருடனைக் கண்டதும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு வணங்குவது வழக்கம். கருடதரிசனத்தை புண்ணியம் மிக்கதாகவும், நல்ல சகுனத்தின் அடையாளமாகவும் கருதுவர். கருடனின் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம் தான். இதனை கருடதர்சனம் புண்யம் ததோபித்வனிருச்யமாதோ என்று சொல்வர். அதன் குரல் சாமவேதம் ஓதுபவதை போல இருக்கும். பறவை இனத்தின் தலைவனாக இருப்பதால் பட்சிராஜன் என்ற சிறப்பு பெயர் இதற்குண்டு. தட்சனின் மகளான வினதைக்கு பிறந்த பிள்ளை என்பதால் வைநதேயன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமாலுக்கு வைகுண்டத்தில் தொண்டு செய்பவர்களில் கருடாழ்வாரே  முதன்மையானவர். கருடனை உபாசித்து, ஆச்சாரியர் சுவாமிதேசிகன் ஹயக்ரீவ மந்திரத்தைப் பெற்றதாக கூறுவர். அவர் இயற்றிய கருடதண்டகம், கருட பஞ்சாஷத் ஆகிய துதிகளை பாடினால் நாகதோஷம், கனவில் பாம்புத் தொல்லை நீங்கும். பஞ்சமுக ஆஞ்சநேயரின் முகங்களில் மேற்கு நோக்கி கருடமுகம் அமைந்திருக்கும். சனிக்கிழமைகளில் கருடதரிசனம் செய்து வருவோர்க்கு எல்லாநலன்களும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !