உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்கே கடன் தந்தவர்!

கடவுளுக்கே கடன் தந்தவர்!

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படும் திருமலை வேங்கடேச பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடைபெற்றபோது, திருமணத்துக்குத் தேவையான நிதியை குபேரனிடம் இருந்து பெற்றதாகவும், அந்தக் கடனுக்கு பிரம்மதேவர் சொல்ல பெருமாள் பத்திரம் எழுதி குபேரனுக்குத் தந்ததாகவும் சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அந்தப் பத்திரத்தில் கலியுகத்தில் விளம்பி வருஷம், வைகாசி மாதம், வளர்பிறை சப்தமி நாளில் ராமர் முத்திரையுடன் கூடிய 14 லட்சம் தங்கக் காசுகளை கடனாகப் பெற்றதாகவும், அந்தக் கடனை வட்டி சேர்த்து 1000 வருஷத்தில் திருப்பிக் கொடுப்பதாக எழுதப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெருமாளுக்கு கடன் கொடுத்ததற்கு முதல் சாட்சியாக பிரம்மதேவரும், இரண்டாவது சாட்சியாக சிவபெருமானும், மூன்றாவது சாட்சியாக அரசமரமும்! இருந்ததாகச் சொல்வார்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !