நாமசங்கீர்த்தன மகிமை!
ADDED :3569 days ago
பகவான் போதேந்திர சுவாமிகளிடம் ஒருவன், ஞானத்தைப் பெற நாமசங்கீர்த்தனம் மட்டுமே போதுமா? எனக்கேட்டான். அதற்கு மகான், ஒருநாட்டின் மன்னன் ஒரு மருத்துவரைவிட மிகப்பெரியவன் என்பதில் ஐயமில்லை. ஆனால், அந்த மன்னனுக்கு நோய் ஏற்பட்டால், அதைப் போக்கிக்கொள்ள, அவனுக்கு அந்த மருத்துவனின் உதவி நிச்சயமாகத் தேவைப்படும். ஆனால் மருத்துவருக்கு நோய் வந்தால், அவனுக்குத் தனது நோயைக் குணப்படுத்த மன்னனின் உதவி தேவையில்லை! அதேபோல ஞானத்திற்கு ஆதாரமான, சித்த சுத்தியைத் தேடிக்கொள்ள நாம சங்கீர்த்தனம் நிச்சயம் தேவை. அதுவே எளிதாக, சுயமாக ஞானத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. ஆகையால் நாமசங்கீர்த்தனம் செய்பவர் வேறெந்த வழியையும் பின்பற்ற வேண்டிய தேவையில்லை என்று கூறினார்.