உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கத் தட்டில் நிவேதனம்!

தங்கத் தட்டில் நிவேதனம்!

காஞ்சிக்கு வந்த பக்தரிடம் மகாபெரியவர், வேத ஹாரமே பகவத் ஆராதனைக்கு சிறந்த முறை என்றார். வேத ஹாரம் வேத மாலை என்பது 108 வேத பண்டிதர்களைக் கொண்டு வேத கோஷம் முழங்க ஆராதிப்பது மகாபெரியவர் சொன்னபடி, ஸ்ரீராகவேந்திரரின் பக்தரும் வித்வான் டாக்டர் கணேஷின் தந்தையுமான ராதாகிருஷ்ணன். இதுபோன்ற இசை வழிபாட்டை மந்த்ராலய சுவாமியின் பிருந்தா வனத்தில் செய்ய ஆசைப்பட்டார். வீணை வாசிப்பில் பண்டிதர் ஸ்ரீராகவேந்திரர் என்பதால், அவருக்கு நாதஹார ஆராதனை பொருத்தமாக இருக்கும் எனறு தீர்மானித்து மகாராஜபுரம் சந்தானம் அறக்கட்டளை மூலம் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. 2005ல் ஸ்ரீராகவேந்திர அவதார தினத்தில் (மார்ச் 15) மந்த்ராலயத்தில் நாக ஹார இதை சமர்ப்பண நிகழ்ச்சி நடந்தது. பாட்டு, வீணை, புல்லாங்குழல், வயலின், நாதஸ்வரம், மிருதங்கம், மோர்சிங் என 250 கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனை, கோஷ்டி கானம், மல்லாரி, வித்வான்களின் வின்யாஸம், நாம ஸங்கீர்த்தனம் பாடி 3 நாட்கள் நடத்தினர். இன்று வரை தொடரும் இதற்காக, ஸ்ரீராகவேந்திர சுவாமி நாத ஹார சேவா அறக்கட்டளை உருவானது. இதன் சார்பில் 2011 ல் வெள்ளி வீணை சமர்ப்பித்தார்கள். 2013ல் நவரத்தின ரதம் சமர்ப்பித்தனர். மந்த்ராலய மட மூல தெய்வமான ஸ்ரீராமர், விஸ்வ கர்மாவால் செய்யப்பட்டவர். ராமருக்கு தங்கத் தட்டில் நைவேத்தியம் செய்வது பலரின் விருப்பம். ராமருக்கு நைவேத்தியம் ஆனபின்னே பிருந்தாவனத்தில் நிவேதனம் ஆகும். மார்ச் 15ல் பிருந்தாவனத்தில் சுமர்ப்பிக்கப்படும் தங்கத்தட்டு, பக்தர்களின் உதவியுடன் ரூ.50 லட்சம் செலவில் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !