உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே

பாரத தேசம் பெண்களை தேவதையாக, தாயாக, தமக்கையாக, இல்லத்தரசியாக, தர்ம பத்தினியாக கொண்டு மதிப்பளித்து சம இடத்தையும் அவர்களுக்கு அளித்துள்ளது. பாரததேச பண்பாட்டில் பெண் கவுரவம் உலகிற்கே உதாரணமாய் அமைந்துள்ளது. மனு யத்ர நார்யஸ்த்து பூஜ்யந்தே: ரமந்தே தத்ர தேவதா எங்கு பெண்கள் கவுரவிக்கப்படுகிறார்களோ அங்கு தேவதைகள் ஆனந்தமாக உலவுவதாக இந்திய விசிஷ்ட மனோ தர்மத்தை சாம்ப்ரதாயத்தை அறுதியிட்டு உறைத்துள்ளார். பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் முதன்மை பாத்திரம் வகிப்பர். வேள்வி யாகங்களில் சதிமணி துணைவியார் பக்கத்தில் உள்ளபோதே அப்புருஷருக்கு வேள்வியை நிர்வாகிக்கும் அதிகாரம் வருகிறது. எனவே ராமனும் அஸ்வமேத யாக வேளையில் பொன் சீதையை வைத்து அந்த யாகத்தை நிர்வகித்தார். பெண் படைப்பின் மூலகாரணம் பெண்களை கவுரவிக்கும் நாடு சகல சவுபாக்கியங்களுடன் வளம் பெறும்.

மானிட அற வாழ்க்கைக்கு ஓர் அடையாளம் விஷ்ணு தத்துவம். இகபர சுகத்திற்கும், பரமபத ப்ராப்திக்கும் இதே வழி. அஷ்ட ஐச்வர்யங்களுக்கு புகலிடம் அஷ்ட லக்ஷ்மிகள். அவர்களின் ஏகாத்மஸ்வரூபம் மஹாலக்ஷ்மி. அத்தாயாருக்கு திருமார்பில் இடமளித்து என் இதயம் தாயார் என்னும் சிறந்த செய்தியை மகாவிஷ்ணு இவ்வுலகிற்கு அளித்தார். பிரம்மா சரஸ்வதியை தன் முகத்தில் வைத்துக் கொண்டு என்னுள் பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரீ என்னும் நான்கு வித வாக்வடிவங்கள் என் தேவியின் வடிவங்களே என்று உலகிற்கு தன் மனைவியை வாக்தேவதையாக பூஜியுங்கள் என்னும் அறிவுரையை அளித்தார். சிவன் பார்வதிக்கு தன் சரீரத்தில் பாதிபாகம் அளித்து அர்த்தாங்கி என்னும் பெயர் வரச்செய்தார். இதன் மூலம் ஆணுக்கு நிகர் பெண் என்னும் சமத்துவத்தை உலகறியச் செய்தார்.

இவ்விதமாக மும்மூர்த்திகளும் பெண்ணை தம் வாழ்க்கை பங்காளியாக மட்டும் பாராமல் தம் இதயம், வாக்கு, சரீரமும் அவர்களின் சக்தியால் சலனம் உறுவதாக நிரூபித்துள்ளனர். அற அடிப்படையிலான மூன்று புருஷார்த்தங்களும் மட்டும் பகவான் வடிவமாகிறது என்று கீதாசார்யன் போதித்ததை மறந்த பெண்ணை வேறு கோணத்தில் பார்ப்பது மனித இனத்திற்கு தகாத செயல். தர்மபத்தினி, சஹதர்மசாரிணி என்னும் பதங்கள் ஆணின் தர்ம நிர்வாகத்தில் பெண்ணின் பாத்திரம் எவ்வளவு சிறந்ததோ, சீரியதோ நிரூபணமாகிறது. ஆகவே வால்மீகி ராமாயணத்தில் ராமனிடம் சீதையை கைப்பிடிக்க வைக்கும் தருணத்தில் ஜனக மகாராஜாவால் சஹதர்மக்ஷீதவ - நீ நிர்வகிக்கும் அத்துணை காரியங்களிலும் உன்னுடன் இருந்து, உன்னை விழிப்படையச் செய்வாள் என்று கன்யாதானம் செய்த சம்பவம் மனித இனம் பிரதி நிமிடம் நினைவு கொள்ளத்தக்கது.

அனைத்திலும் பாரத நாடு பெண்ணை ஒரு பெண்ணாக மட்டும் பார்க்காமல் சமூக அந்தஸ்தினை உயர்த்தும் சக்தியாக எண்ணி கவுரவிக்கிறது. தாயன்பு கொண்ட பெண்ணை ஏளனம் பண்ணாமல், பிறன்மனை நோக்கா பேராண்மையும், அறத்தொடு நிற்றலும் கடுகளவாவது வழக்கப்படுத்தி வாழத் தொடங்கினால் அதுவே அந்த பெண் இனத்திற்கு நாம் அளிக்கும் உண்மையான கவுரவம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !