உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

ஜலகண்டாபுரம்: சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. ஜலகண்டாபுரம் அடுத்த பெரியசோரகை பஞ்சாயத்து, பழையூர் சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 27ல், முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவிரி நீர் தீர்த்தக்குடங்களுடன், ஜலகண்டாபுரம், வன்னியர் கோவிலில் இருந்து, மேள, தாளத்துடன், பழையூர் சின்ன மாரியம்மன் கோவிலுக்கு, ஊர்வலம் வந்தனர். இன்று காலை, 6:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !