உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் குரு பூஜை

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் குரு பூஜை

கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், கண்ணப்ப நாயனாருக்கு சிறப்பு பூஜை விழா நடந்தது. தை மாதத்தில், மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களில் சிவனுக்கு கண்ணை தானமாக தந்த, கண்ணப்ப நாயனாருக்கு சிறப்பு பூஜை, திருவீதி உலா நடக்கும். தை மாதம் மிருகசீரிஷ நட்சத்திர நாளான நேற்று காலை, கண்ணப்ப நாயனாருக்கு சிறப்பு பூஜையும், அதை தொடர்ந்து திருவீதி உலாவும் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !