உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா

கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றுவரும் 80 ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி,தேர்த்திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 9மணி முதல் மூலவர் மற்றும் ஊற்சவ மூர்த்தி பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் 10:30 மணியளவில் ஞானாம்பிகை அம்மன்,ராமாநாதீஸ்வரர் மற்றும் பஞ்ச மூர்த்தி சுவாமிகளுமாக இரண்டு தேர்களை பக்தர்கள் வடம்பிடித்தனர்.இதில் கண்டாச்சிபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன்,பாலகிருஷ்ண சிவாச்சாரியார் மற்றும் ஊர்பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !